உலகின் ஒரே தலைவன் என் ஸ்ரீராமன் மட்டுமே.
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே"
மனிதன் எப்படி வாழவேண்டும் ? என்று வாழ்ந்து காட்டியவன் ராமன் தனது வாழ்க்கை முழுவதும் இறைவனுக்குரிய எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்தாமல், மனிதனாகவே வாழ்ந்து காட்டினான். தர்மம் காக்க வேண்டி வாழ்வின் அனைத்து துன்பங்களையும் கலங்கா மனதோடு எதிர் கொண்டான் . அவன் நடந்து காட்டிய வழி ராமன் வழி அதுவே, (இராம - அயனம்) இராமாயணம்.
எனவே நம் தலைவனின் வெற்றியை
மானுடம் வென்றதம்மா ! என்றார் கம்பர்
தலைவன் தாள் பணிவோம் ! நலம் அனைத்தும் பெறுவோம் !!
ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் !!